இன்றைய ராசிபலன் 14.06.2025

மேஷம்
இன்று பணவரவு கூடும். தொழில், வியாபாரம் எப்போதும் போல் மாற்றமின்றி ஓடும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். அதிகாரிகள் பாராட்டு பெருமை சேர்க்கும்.
ரிஷபம்
தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை சென்று புண்ணியத்தை தேடிக் கொள்வார்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்க பெற்று உங்கள் அந்தஸ்து உயரும்.
மிதுனம்
கடின உழைப்பின் காரணமாக சரியான நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்கினால் முன்னேற்றம் உண்டு. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கன்னி
தேவையற்ற பண விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. மதிப்பு மரியாதை ஆகியவை குறையும். சிலருக்கு மன அமைதி குறையும். ஆயினும் தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
மகரம்
நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும். பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.
கடகம்
இன்று, அதிக தனலாபம் எதிர்பார்க்கலாம். வெற்றி மேல் வெற்றி ஏற்படும். புதிய நண்பர்கள் தொடர்பு, எதிர் பாலர் பால் ஈர்ப்பு ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும்.
சிம்மம்
தனவரவு மேம்பட்டு பொருளாதார நிலை சீர்படும். இனிய சுற்றுலாப் பயணங்களின் இன்பம் பெருகும். எதிரிகள் பயந்து, பணிந்து சரணடைவர். எடுத்த காரியங்கள் யாவும் எளிதில் வெற்றி பெறும்.
துலாம்
அன்புத் தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக பயண சுகம் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
மீனம்
இன்று, உறவுகளைச் சந்திப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் உண்டு. படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவு வகைகள் ஆகியவையும் கிடைக்கும்.
தனுசு
எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
தனலாபம் பெருகும். குடும்ப ஆரோக்கியம் மேம்பாடு அடையும். நிம்மதியான படுக்கை சுகம் ஏற்படும். புதிய நண்பர்கள் சந்திப்பு நலம் தரும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்
எதிர்பாராத வகையில் செலவுகள், மற்றும் தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். வீண் பண இழப்பை தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.

Recommended For You

About the Author: admin