கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனை

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்த்துகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரபல Forbes பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் களத்தில் விளையாடுவது மட்டுமல்லாது, பிரபலமான விளம்பர படங்கள் நடித்தல் , தன்னுடைய உணவகம், மற்றும் தன்னுடைய உடற்பயிற்சி கூடம் என்பவற்றின் மூலமும் வருமானம் ஈட்டிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டொலர்கள் சம்பாதித்ததாக Forbes தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றிருந்த அதே நேரம் இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல மதிப்புமிக்க பிராண்டுகளுக்கான தனது விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும், தனது சொந்த CR7 பிராண்டின் கீழ் ஹோட்டல்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஜிம்கள் போன்ற வணிகங்கள் மூலமாகவும் ரொனால்டோ தொடர்ந்து  பணம் சம்பாதித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: admin