அடுத்த ஏலத்திற்கு முன்பாக ஐந்து வீரர்களை கழற்றிவிடும் சென்னை அணி!

ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, 7 தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்த முறை ஏலத்தில் எடுக்கப்பட்ட சில வீரர்கள் அணியின் வெற்றிக்கு பங்களிக்கவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக சென்னை அணி 5 வீரர்களை கழட்டிவிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் பெரிதாக விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. அவர் விடுக்கப்பட்டு, மினி ஏலத்தில் குறைந்த விலைக்கு மீண்டும் எடுக்கப்படலாம்.

மிடில் ஆர்டரில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் ஒன்றிரண்டு போட்டிகளில் சோபித்தாலும், பெரிய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் ஐவரும் வெளியேற்றப்படலாம்.

இங்கிலாந்தின் சாம் கர்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு  சென்னை அணியில் இணைந்தார். ஆனால், ஆல்ரவுண்டரான கர்ரன் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சோபிக்காததால், இவரும் விடுவிக்கப்பட்டு மினி ஏலத்தில் எடுக்கப்படலாம்.

நியூசிலாந்தின் டெவோன் கான்வே கடந்த சீசன்களில் சிறப்பாக விளையாடினாலும், நடப்பு தொடரில் ஃபார்மில் இல்லை. ரச்சின் ரவீந்திரா இவருக்கு போட்டியாக இருப்பதால், இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

ரஹானேவுக்கு பதிலாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ராகுல் த்ரிப்பாதி, தொடக்க வீரராக களமிறங்கினாலும் ஓட்டங்கள் எடுக்க தடுமாறுகிறார். இதனால் நிச்சயமாக இவரை சென்னை அணி வெளியேற்றலாம்.

Recommended For You

About the Author: admin