சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர், அவர் நடிக்க இருக்கும் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல், ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்திருந்தார். இந்த படத்தை கலகலப்பாக கொண்டு சென்றது அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
, மோகன் லால், உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பகத் பாசில் இப்படத்தின் கதைக்கு திருப்புமுனை ஆன ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பார் என கூறப்படுகிறது.
தொடர்ந்து தமிழ் படங்களில் மாஸ் கேரக்டரில் நடித்து வரும் பகத் பாசில், ‘ஜெயிலர் 2’ படத்திலும் தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

