தவறான முடிவெடுத்த ஆசிரியை: கிணற்றில் கிடந்த சடலம்

தவறான முடிவெடுத்து வீட்டுக் கிணற்றில் வீழ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பலவாணர் வீதி, ஆத்தியடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபாரத்தினம் விஜயலட்சுமி (வயது-79) என்பவராவார்.

கிணற்றில் சடலமாக காணப்பட்டதை அடுத்து சம்பவம் இடத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (22) சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சாட்சிகளை யாழ்ப்பாண பொலிசார் நெறிப்படுத்தினர்.

Recommended For You

About the Author: admin