சட்டமா அதிபரை நாளை காலை சந்திக்கிறது தேர்தல் ஆணையம்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் சட்டச் சிக்கல்கள், குழப்பங்கள் ஏற்பட்டுள்ள பின்னணியில் இன்று காலை கூடிய தேர்தல் ஆணையம் அது பற்றி விரிவாக ஆராய்ந்தது. தேர்தல் ஆணையக் கூட்டத்தில் ஆணையாளர்களிடையே முரண்பாடான கருத்து நிலைப்பாடுகள் வெளிப்பட்டன எனத் தெரிகிறது.

இவ்விவகாரத்தை ஒட்டி நாளை காலையில் சட்டமா அதிபரை தேர்தல் ஆணையம் நேரடியாகச் சந்திக்கக் கூடிய ஏற்பாடு இருப்பதாக அறிய வந்தது.

சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்த பின்னரே தேர்தல் வேட்பமனுக்கள் நிராகரித்தமை தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றத்தினதும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் தீர்ப்புகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து என்ன செய்வது என்பது பற்றி தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.

சட்டச் சிக்கல்கள், வழக்குகள், நெருக்கடிகள் இல்லாத உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை குறிப்பிட்ட மே 6ஆம் திகதி நடத்திக் கொண்டு, சட்டச் சிக்கல் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களைப் பிறிதொரு கட்டத்தில் நடத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரியவந்தது

Recommended For You

About the Author: admin