
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் ரூபாய் 5 இலட்சம் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரச கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான், மியன்மார், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாட்டினர் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உட்பட இந்தியர்களுக்கான ஆவணங்களையும் போலியாக பெற்று வருகின்றனர்.
இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, பாஸ்போர்ட் விசா போன்று எந்த ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விசா காலம் முடிந்ததன் பின்னரும் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3 இலட்சம் அபராதமும் விதிக்கும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.