காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரசாரத்தை வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் நாளை (14) காதலர் தினத்தை முன்னிட்டு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில்,

“நீ ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தன்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உன் பெற்றோர் உனக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் ஏதேனும் சிக்கல்களை சந்தித்தால், 109 அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin