
போட்டியின்போது காயமடைந்த அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி சிகிச்சை பலனின்றி தனது 28 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 1-ம் திகதி நடைபெற்ற பெதர்வெயிட் பட்டத்திற்கான போட்டியின் 9-வது சுற்றில் சக போட்டியாளர் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜான் கூனி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை செய்ததில் அவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு வார காலம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குத்துச்சண்டை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.