சற்றுமுன் கோட்டைக்கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். சாரதி தப்பியோட்டம்
மட்டு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன் கோட்டைக்கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக்கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித் தள்ளியதில் அப் பெண்மணி படுகாயமடைந்ததுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வேனின் சாரதி வேனைக் கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில் அவ்விடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
கோட்டைக்கல்லாறு பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த சமயமே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.