திருகோணாமலை போலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது, சம்பூர் போலிஸ் நிலையம் சார்பில் கட்டைபறிச்சான் பாலம் சேதமடைந்தள்ளதுடன், அதனை பொது மக்கள் பயன்படுத்தாதவாறு எச்சரிக்கையினை இடுமாறு கோரப்பட்டிருந்தது.
மேற்படி விடயத்தினைக் கருத்திற் கொண்டு, செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய சபை ஊழியர்களால், 2025.01.09 ஆந் திகதியன்று பாலத்தின் சேதமடைந்த பகுதிகளால் மக்கள் பயணிப்பதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக குறித்த பாலத்தின் உடைந்த பகுதிகளில் மண் நிரப்பப்பட்ட பரல்கள் இடப்பட்டதோடு, அப்பகுதிகளால் கனரக வாகனங்கள் செல்வதும் தடை செய்யப்பட்டது.