அரநாயக்க, கலாதாரா, ஹடபிமா காலனியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். என்ற சந்தேகத்தின் பேரில், அதே காலனியைச் சேர்ந்த 60 வயது நபர், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை, அரநாயக்க பொலிஸில், வியாழக்கிழமை (08) செய்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.