தைப்பொங்கல் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கோட்டை மற்றும் கோட்டை – காங்கேசந்துறைக்கு இடையில் இந்த விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26, 31 ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

பெப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் விசேட ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரி மேலும் தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin