ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம்

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம்

ரயில்வே சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர நேற்று பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளராக என்னை மீண்டும் நியமித்ததற்காக அமைச்சரவை அமைச்சர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில், மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் நிறுவனமாக ரயில்வே துறையை மாற்ற வேண்டும். மக்களுக்கு உகந்த சேவையை வழங்க வேண்டும்.

ரயில்வே துறை மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு முக்கிய நிறுவனமாகும்.

அரசாங்கத்தின் புதிய கொள்கைகளின்படி, நாளாந்த பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்கும் திட்டம் உள்ளது.

ரயில்வே துறைக்குள் சில நெருக்கடிகளும் சிக்கல்களும் உள்ளன. அவற்றை விரைவில் நிவர்த்தி செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

Recommended For You

About the Author: admin