வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா..!
நமது பண்டைய பாரம்பரியங்களை எடுத்து காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட இப் பொங்கல் விழாவில் முதல் கட்டமாக அதிகாலை வயலில் ஒரு நல்ல நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு, அறுவடையின் முதல் பகுதி வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், மாட்டு வண்டிகள் ஊடாக ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல் அறுவடையின் முதல் பகுதியிலிருந்து அரிசி பெறப்பட்டு, பொங்கல் தயாரிக்கப்பாட்டு , சூரியனுக்கு படைக்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்வுகளுடன் பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.
இந்த நிகழ்வை வவுனியா மாவட்ட செயலகத்தின் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன் நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர மேலதிக மாவட்ட செயலாளர் திரு. நா.கமலதாசன் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உதியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர்.

