நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடம்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மூல விக்கிரகம் உடைக்கப் பட்டுள்ளதாக நிர்வாக சபையினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை – நிலாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பூசை நிகழ்வுகள் நிறைவு பெற்று ஆலயத்தை பூட்டிவிட்டுச் சென்று மறுநாள் மாலை 4.00 மணியளவில் திருக்கார்த்திகை தீப விசேட பூசை வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்றபோது ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டு மூல விக்கிரகம் உடைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினரால் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நிலாவளி வேலூர் முருகன் ஆலயத்திலும் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக நிலாவெளி பொலிஸார் கைரேகை அடையாளங்களைப் பதிவு செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.