மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தையான கோடீஸ்வரன் வேணுராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

முகத்துவாரம் பகுதியில் இருந்து இயந்திர படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்க நேற்றிரவு (12) இருவர் மீன்பிடித்துவிட்டு மீண்டும் கரைப்பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது படகு திடீரேன கவிழ்ந்ததையடுத்து ஒருவரை காப்பற்றியதுடன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin