“நாங்கள் முட்டாள்களும் இல்லை வீழப் போவதும் இல்லை
உலக உணவுத் திட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்ட 1300 மில்லியன் டொலர்கள் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கூட்டும்போது அது ரணிலின் வரவு செலவுத் திட்டத்திற்கு சமம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரவு செலவு திட்டம் தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அநுரவின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான செலவு அறுபத்து நான்கு வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார்.
ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் செலவுகள் ஒரே மாதிரியானவை என கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், எதிர்கட்சியில் உள்ள சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரேஷ்டர்கள் என கூச்சலிடுவதில் பலனில்லை. எங்களுக்கும் தெரியும் நாங்கள் ஒன்றும் எதிலும் குறைந்தவர்கள் இல்லை. உங்கள் ஆலோசனைகளை நாங்கள் ஏற்க வேண்டும் என்ற நியதிகள் இங்கில்லை.. நாங்கள் முட்டாள்கள் இல்லை, நாங்கள் ரணில் விக்கிரமசிங்க சென்ற பாதையில் செல்வதாக கூறுகிறார்கள். நாங்கள் எங்கும் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து விலகுவதாக கூறவே இல்லையே.. என்றும் தெரிவித்திருந்தார்.