“விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுங்க..”
விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விவசாய நிலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்டத் தடையில்லை என விவசாய அமைச்சர் லால் காந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சினையை அவசரமாக தீர்த்து வைப்போம் என உறுதிமொழி வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கை முழுவதும் வனவிலங்குகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இப்பிரச்சினையை தீர்க்காமல் முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.