நிமல் சிறிபாலவுக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் விசாரணை
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக தெரிவித்து லஞ்சம், ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடியுரிமை அமைப்பினால் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிமல் சிறிபாலத சில்வா, அமைச்சராக இருந்த காலத்தில், தனது மனைவி, தோழி மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பெருமளவிலான சட்டவிரோத சொத்துக்களை குவித்துள்ளதாக உரிய முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.