பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்..!

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல்நலக் குறைவால் காலமானார்.

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ என்ற சீரியலில் ராதிகாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நேத்ரன். இவர் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று உள்ளார்.

இவரது மனைவி தீபா நேரத்ரன், அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி பிரபலமான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், வேறு ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் மாரி என்ற சீரியலில் கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

நேத்ரனின் மகள் அபிநயாவும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து இருந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது அப்பா நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக நேத்ரனின் மகள் அபிநயா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கமெண்டுகளை போட்டு வந்தனர். இந்த நிலையில், நேத்ரன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து உள்ளார். அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை சுமார் 25 வருடங்கள் சின்னத்திரையில் பிரபல நடிகராக நேத்ரன் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin