பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
கொட்டாவ – தலகல வீதியின் திபாங்கொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.