சரிகமப இறுதிச்சுற்று ; ஈழத் தமிழ் இளைஞன் இரண்டாம் இடம்..!

சரிகமப இறுதிச்சுற்று ; ஈழத் தமிழ் இளைஞன் இரண்டாம் இடம்..!

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று (23.11.2025) இடம்பெற்றது.

இந்தநிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவர், போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்தநிலையில், அவருக்கு சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து இலங்கை வாழ் மக்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin