மலேசியா மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் பெய்த பலத்த மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு மலேசியாவில் 122,000 இற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெற்கு தாய்லாந்தில், சுமார் 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
புயல் எச்சரிக்கை மற்றும் பலத்த மழை தொடர்ந்தும் பெய்து வரும் நிலையில் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருதோடு தங்குமிடங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
தெற்கு தாய்லாந்தில் வெள்ளம் காரணமாக சுமார் 534,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக பேரிடர் ஏற்படக்கூடிய ஆறு மாகாணங்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளன.
மேலும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விரைவாக இயல்புநிலையை மீட்டெடுப்பது அவசியம் எனவும் தாய்லாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

