டொலர் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் 100 சவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது.

சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.

அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் டொலரை தவிர்க்க முயற்சிக்கும் போது நாங்கள் வேடிக்கை பார்த்த காலம் முடிந்து விட்டது.

இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்க கூடாது. இதை மீறும் போது 100% கூடுதல் வரிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

இல்லையெனில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெற்று கொள்ளலாம்.”

“அவர்கள் மற்றொரு ஏமாளியை தேடிக் கொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொாலரை பிரிக்ஸ் மாற்றும் வாய்ப்பு இல்லை, இப்படி செய்ய நினைக்கும் நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ளலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin