சீரற்ற வானிலை: தொடர் அவதியில் மக்கள்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் 229 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 103 வீடுகள் முழுமையாகவும் 2635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

24 மாவட்டங்களில் 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல மாகாணங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin