இந்தியாவின் புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கணவருடன் பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார் குறித்த கர்ப்பிணிப் பெண்.
அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கர்ப்பிணி அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றுள்ளனர்.
கர்ப்பிணியின் நகை பறிக்கப்படும்போது அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.
இக் காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

