முந்தலம் – 412 ஏக்கர் பகுதியில் நேற்று (28) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார், இந்த விபத்தில் கணவன், மனைவி என தம்பதி உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரும் 55 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த இருவரும் தங்கள் குடியிருப்புக்கு அருகில் வணிக வளாகம் நடத்தி வந்தனர்
வணிக இடத்திற்கு தனியாக மின்சாரம் பெறப்படவில்லை எனவும், கம்பியை பொருத்திய எடுக்கப்பட்ட மின் கம்பியினால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வயரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்ட கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அருகில் வசிப்பவர்கள் இருவரையும் முந்தலம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

