இந்தியாவின் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில பொலிஸ் தலைமை இயக்குநர்களுக்கான மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.
இம் மாநாடு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அனைத்து மாநில மற்றும் பிரதேச பொலிஸ் தலைமை இயக்குநர்கள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பில் ஒடிசா மாநில பொலிஸ் தலைமை இயக்குநர்கள் கூறுகையில்,
“மூன்று நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்ட மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் புவனேஸ்வரம் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.
2013 ஆம் ஆண்டு வரையில் இம் மாநாடு தலைநகர் டில்லியில் மட்டுமே நடைபெற்று வந்தது. 2014 ஆம் ஆண்டு முதல் பல மாநிலங்களில் இம் மாநாடு நடத்தப்பட்டு பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றது.