தேசிய மக்கள் சக்தியின் அனைத்துப்பொதுமக்கள் பிரதிநிதிகளும் கொடுப்பனவுகளைப் பெறுவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரினதும் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் 159 பேருக்கும் கொடுப்பனவுகளைப் பெறமாட்டோம். அவை பொது நிதியில் வரவு வைக்கப்படும். அந்த பொதுநிதியில் இருந்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதை செய்வோம். அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு சலுகைகள் கிடையாது. மக்கள் சுமையாக இருக்காமல் உழைக்க வேண்டும் என்றார்.