யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 1492 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 1492 குடும்பங்களை சேர்ந்த 5591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில்,
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.
ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 175 குடும்பங்களை சேர்ந்த 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 16 குடும்பங்களைச் சேர்ந்த 47பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 573 குடும்பங்களை சேர்ந்த 2335 பேர் வெள்ள அணுத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது வீடு ஒன்றும் பகுதியளவில் செய்த அடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 68 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 167 குடும்பங்களை சேர்ந்த 569 பேர் பல அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களை சேர்ந்த 53 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு கொண்டும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 465 குடும்பங்களை சேர்ந்த 1517 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin