மூன்றாம் உலகப் போர் ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகிவிட்டதாக உக்ரெய்னின் முன்னாள் இராணுவ தளபதியும் பிரித்தானியாவுக்கான தற்போதைய உக்ரெய்ன் தூதுவருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ரஷ்யா-உக்ரெய்ன் மோதலில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப் போர் ஆரம்பமானதற்கு அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகிவிட்டது. 10,000 வட கொரிய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரெய்னுக்கு எதிராக ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

உக்ரெய்னில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நிலைமை சற்று சாதகமாக உள்ளது.

ஆனால், போரில் தனித்து வெல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது. வட கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரெய்னுக்கு முன்னாள் உள்ளனர். உக்ரெய்னில், ஈரானிய வீரர்கள் பொதுமக்களை எந்தவித பாரபட்சம் இல்லாமல் கொலை செய்கிறார்கள்.

உக்ரெய்னின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றார்.

Recommended For You

About the Author: admin