(video)
முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் புதிய வேட்பாளர்களும் மக்களின் வாக்கினைப் பெறுவதற்காகப் பெருமளவிலான பணத்தினைச் செலவழிக்கின்றனர். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அன்ரன் ரொஜன் தெரிவித்துள்ளார்,
இன்று (11.11), திங்கட்கிழமை மாலை , மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
“தேர்தல் காலங்களில் மக்களைச் சென்று பார்க்கிற அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தல்
முடிந்தால் மக்களைச் சென்று பார்க்காதது ஏன் என்ற கேள்வி எனக்கு எழுகிறது.”
“இப்போது களமிறங்கியுள்ள பெரும்பாலான சுயேச்சைக் குழுக்களுக்கு பின்புலத்தில் ஒரு பணபலம் இருகின்றது.
எங்களது வாக்குகளைச் சிதறடித்து ஒற்றுமையைக் குலைக்கவே அவர்கள் முயற்சிகின்றார்கள்.”
“எங்களது கட்சி மட்டுமே. ஐந்து கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டான கட்சி எனவே மக்கள் தங்களுக்கான தலைமையைச் சரியான முறையில் தேர்வு செய்யவேண்டும்.”
“நான் மக்களால் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் மக்களை யாரிடமும் கையேந்த விடாது அவர்களுக்கான உரிமையைப் பெற்றுகொடுப்பேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.”