மேஷம்:
மேஷம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். நாளை நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் பணிகள் வழக்கம்போல் நடைபெறும். பணிகளை சிறப்பாக மேற்கொள்வீர்கள். துணையுடன் அன்பான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். நாளை, சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை வகையில் பணவரவு வரும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெற முடியும். பணியிடத்தில் வேலை சம்மந்தமான பயணம் காணப்படும். மேலும், உங்கள் திறமையை கண்டு மேலதிகாரி பாராட்டுவார். துணையுடன் கோபமாக நடந்து கொள்வீர்கள். நாளை, பணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. வருத்தத்துடன் இருப்பீர்கள். பணியிடத்தில் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பணியில் கூடுதல் கவனம் தேவை. துணையுடன் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். நாளை, பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பண விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. நாளை நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் செயல்களில்/முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நாளை, ஆன்மீக விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை, நீங்கள் எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு உகந்த சூழ்நிலை இருக்காது. பணியை மேற்கொள்வதில் உங்கள் ஆர்வம் குறைந்து காணப்படும். துணையுடன் பாதுகாப்பின்மை உணர்வு உண்டாகும். நாளை, பணப்புழக்கம் இருக்காது. மேலும், பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. நாளை உங்கள் செயல்களில் முயற்சிகளில் சில தாமதங்களும் தடைகளும் உண்டாகும். பணியிடத்தில் பணிகளை கையாளுவதை கடினமாக உணர்வீர்கள். மேலும், சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு உண்டாகும். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். நாளை, செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அனுகூலமான நாளாக இருக்காது. நாளை, நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். எதிலும் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். மேலும், சக பணியாளர்களுடன் பேசும்போது சிக்கல்கள் உண்டாகும். துணையை அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். ஆன்மீக விஷயங்களுக்காக பானத்தை செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் மற்றும் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கிறது. உங்கள் செயல்களில்/ முயற்சிகளில் தடைகள் இருந்தாலும், அதனை எளிதாக சமாளித்து முன்னேறுவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி, பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்திறன் கண்டு மேலதிகாரி பாராட்டுவார். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு உண்டாகும். நாளை, பணவரவு அதிகமாக இருக்கும். பணத்தை பயனுள்ள விஷயங்களுக்காக செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு:
தனுஷ் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. நாளை, நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இதனால், மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நாளை பணவரவு, அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அனைத்து விதத்திலும் நாளைய நாள் நன்மை அளிக்கும்.
மகரம்:
மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. நற்பலன்களை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலை நிலவும். உங்கள் செயல்களில் சில தாமதங்களை சந்திப்பீர்கள். துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். நாளை, செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை, நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும்போது எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாளை, பணவரவு குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் காய்ச்சல், தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் :
மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உற்சாகமான நாளாக இருக்கிறது. நாளை , புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக பணியாற்றுவீர்கள். துணையுடன் வெளிப்படையாக பேசி நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தி கொள்வீர்கள். நாளை, பணவரவு சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்