இன்றைய ராசிபலன் 17.10.2024

மேஷம்

ரிஷபம்

கல்விப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுக எதிர்ப்புகளையும், திறமைகளையும் அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

 

மிதுனம்

புதிய வாகனங்களை வாங்குவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வீடு மற்றும் கால்நடை சார்ந்த செயல்களில் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மருத்துவ சிகிச்சைகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

 

கடகம்

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மாமியார் உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும்.

சிம்மம்

காதில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை தரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

 

கன்னி

துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் ஆதாயமடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அறப்பணிகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வு கிடைக்கும்.

 

துலாம்

 

உணவு சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடலளவில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

 

விருச்சிகம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

தனுசு

தொழில் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

மகரம்

அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.

 

கும்பம்

புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். வஞ்சகமான பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களை வழிநடத்தி செல்லும் திறமை வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.

 

மீனம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள்

Recommended For You

About the Author: admin