இன்றைய ராசிபலன் 07.10.2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய பாராட்டை பெறுவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்களுக்கும் இன்று லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். ஆன்மீக சுற்றுலா பற்றிய பேச்சுக்களை இன்று பேசலாம். வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. முக்கியமான வேலைகளை அலட்சியமாக கையாளக் கூடாது. உங்கள் குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சி செய்தும், தோற்றுப் போன காரியத்தை இன்று கையில் எடுத்தால், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வேலை தேடலாம்‌. நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். இந்த நாளை எப்படி தான் நகர்த்தி செல்வது என்று சிந்தித்துக் கொண்டே கண் விழிப்பீர்கள். ஆனால் கடவுள் உங்களுக்கு இன்று பெரிய அளவில் அனுகிரகத்தை கொடுப்பான். சந்தோஷத்திற்கு இன்று ஒரு குறையும் வராது. நடக்க வேண்டியது எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். அனைவரையும் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். ஏதாவது ஒரு பிரச்சனையை நீங்களே போட்டு குழப்பிக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் நிஜத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இறைவனை வழிபாடு செய்து விட்டு இந்த நாளை துவங்குங்கள். இறைவன் மீது பாரத்தை போடுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். நல்லது நிச்சயம் நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன நஷ்டங்கள், பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலில் முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனம் இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. கூடுமானவரை இன்று கடன் வாங்காதீங்க, கடனையும் கொடுக்காதீங்க. அன்றாட வேலையில் கவனத்தோடு செயல்படுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதுவுமே பெருசா செய்ய மாட்டீங்க. ஆனா உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை பாராட்டுவார்கள். தானாக அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தானாக நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற குழப்பங்கள் இருக்கும். புது முடிவுகளை எடுக்காதீங்க. பெரியவர்களின் ஆலோசனையை செவிகொடுத்து கேளுங்கள். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம். நிறைய பணம் கொடுத்து இன்று எந்த பொருளையும் வாங்க வேண்டாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மன நிம்மதி அடைவீர்கள். வீண்விரய செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைக்கு தேவையான சில முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை இன்று துவங்கலாம். நல்லது நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். வேலையில் முழு மூச்சோடு இறங்குவீர்கள். விவேகத்தோடு செயல்படுவீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். அடுத்தவர்களால் நீங்கள் பிரச்சனைக்குள் தள்ளப்பட்டாலும், அதிலிருந்து சுலபமாக வெளி வருவீர்கள். பிரச்சனையில் இருப்பவர்களையும் காப்பாற்றுவீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று அதி அற்புதமாக வேலை செய்வீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து சுலபமாக வெளி வருவீர்கள். புத்திசாலித்தனம் திறமை எல்லாம் உங்களிடத்தில் ஒன்று குவியும். சமயோஜித புத்தியோடு செயல்படுவதால் பாராட்டுகளும் கிடைக்கும். யாருக்கும் அடி பணிய மாட்டீர்கள். உங்கள் மனது சொல்வதை மட்டும் கேட்பீர்கள். நல்லதே நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று பக்குவத்தோடு நடந்து கொள்வீர்கள். மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகளுடைய மகிழ்ச்சிக்கு நிறைய உழைப்பீர்கள். குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். இன்றைய நாள் மன நிறைவான நாளாகவும் இருக்கும். இறையருள் நிறைந்த நாளாகவும் இருக்கும். வேலையிலும் தொழிலிலும் பெருசாக எந்த டென்ஷனும் இருக்காது.

Recommended For You

About the Author: admin