நாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் நேற்று இரவு 10.00 மணி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்திய ஊரடங்கு சட்டம் இன்று (22) காலை 06.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்
நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை ஆறு மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.