முல்லைத்தீவு மாவட்டத்தில்: ஜனாதிபதி தேர்தலில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் தகுதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் அ.உமாமகேஸ்வரண் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று(17) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் 21ஆம் திகதி இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளது.

இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1506 பேர் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் இதேவேளை சுமார் 500 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

137 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கப்பட்டதை தொடர்ந்து வாக்குப்பட்டிகள் 21 ஆம் திகதி மாலை முல்லைதீவு மத்திய மகா வித்தியாலயத்துக்கு எடுத்துவரப்பட்டு அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற எட்டு வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கென்னும் பணிகள் இடம்பெற இருக்கின்றன என தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin