ஜேர்மனியின் பவேரியாவில் உள்ள நோர்ட்லிங்கன் நகரில் உள்ள ஒரு கல்லறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான வாள் கண்டுபிடிக்கப்பட்டது.
3000 ஆண்டுகள் பழமையான இந்த வாள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், சில கீறல்கள் தவிர, இந்த இடத்தில் கிடைப்பது மிகவும் அரிது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவேரியா மாநிலத்தின் நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புத் துறைத் தலைவர் மத்தியாஸ் பிஃபீல், இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகையில், “நமது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த நினைவுச்சின்னத்தை இன்னும் துல்லியமாக வகைப்படுத்துவதற்கு வாள் மற்றும் கல்லறை இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இருப்பினும், இது ஒரு அசாதாரண சூழ்நிலை என்று கூறலாம், இது மிகவும் அரிதானது.