யாழில் 262 பேருக்கு விசேட அடையாள அட்டை..பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும். உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவிப்பு.
யாழ் மாவட்டத்தில் இம்முறை நிரந்தர வலிமை இழந்த விசேட தேவை உடையவர்களுக்காக விசேடமாக பத்து வருடத்திற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை 262 பேருக்கு கிடைக்க பெற்றுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் ஏசி. அமல்ராஜ் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும் நியாயமான தேர்தலாக நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தேர்தல்கள் திணை களத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் இடம்பெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் விசேட தேவை உடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாகனத்தில் சென்று வாக்களிக்க கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விசேட தேவை உடையவர்கள் அப்பகுதி கிராம சேவையாளரிடம் அறிவுறுத்தவர்களை பெற்று ஒருவரை அழைத்துச் சென்று வாக்குகளை வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது வலிமை இழந்த விசேட தேவை உடையவர்கள் ஒவ்வொரு வருடமும் மருத்துவச் சான்றுகளை பெற்று வரும் நிலையில் இம்முறாயே பத்து வருடங்களுக்கு மருத்துவச் சான்றிதழ் பெறாமல் வாக்களிக்கும் ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.
ஆகவே யாழ் தேர்தல் தொகுதியில் 262 பேருக்கு 10 வருடங்கள் செல்லுபடியாகும் அடையாள அட்டை கிடைக்க பெற்றுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.