ஜப்பானில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 8) சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGC) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஜப்பானிய தீவுகளான கியுஷு மற்றும் ஷிகோகுவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை (உள்ளூர் நேரம்) ஜப்பானின் தெற்குப் பகுதியை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளில் அமைந்துள்ளது. அவை, பசிபிக் தட்டு, வட அமெரிக்க தட்டு, பிலிப்பைன்ஸ் தட்டு மற்றும் யூரேசிய தட்டு ஆகும்.
இந்த நான்கு தட்டுகளின் இருப்பு, ஒன்றுக்கொன்று எதிராக அசைத்து, இப்பகுதியை மிகவும் சிக்கலானதாகவும், நிலநடுக்கம் ஏற்படக்கூடியதாகவும் ஆக்குகிறது.
இந்த ஆண்டு ஜப்பானில் ரிக்டர் அளவில் ஏழு அல்லது அதற்கு மேல் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல் நிகழ்வு அல்ல.
கடந்த ஜனவரி முதலாம் பிற்பகலில், நாட்டின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள நோட்டோ தீபகற்பத்தில் சக்திவாய்ந்த 7.6 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது