ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஒருவர் மூலம் காலி ஹாலிவல பிரதேசத்தில் வசிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளை வழங்கும் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கடந்த 6ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முறைப்பாடு வழங்கியவர் காலி ஹாலிவலயில் காணப்படும் தனது வீட்டுக் காணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் நன்கொடையாக தேர்தல் காரியாலயம் ஒன்றை திறக்க எதிர்ப்பார்த்துள்ளார்.
அதன்போது காலி பட்டதூவ பிரதேசத்தில் வசிக்கும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் தனது மனைவியுடன் வந்து ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலம் ஒன்றை திறந்தால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தாக முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலி பொலிஸின் தேர்தல் பிரிவுக்கு இந்த முறைப்பாட்டை முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை ஜேவிபி கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த பகிரங்கமாக தெரிவித்திருப்பதால், அவரை உடனடியாக குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தகக்து.