மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்பு இல்லாமல் இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து விடவும். பிள்ளைகளுக்கு தேவையானது, கணவருக்கு தேவையானது, வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தேவையானதை பொறுப்போடு செய்து விடுங்கள். இல்லை என்றால் குடும்பத்தில் சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட இழப்புகள் வரலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கோபமே வராது. ஆனால் பிரச்சனைகள் வரும். அதை சமாளிப்பதற்கு உண்டான வழிகளை தேடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை பெறுவீர்கள். பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுடைய தேவைகளை பெற்றவர்கள் சரியாக பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டைகள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். உறவுகளோடு கவனமாக பேசுங்கள். தெரியாத மூன்றாவது நபரிடம் குடும்பத்தை பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசக்கூடாது ஜாக்கிரதை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். எதிரிகளை சுலபமாக சமாளித்து ஜெயிப்பீர்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். வந்த வழி தெரியாமல் காணாமல் போய்விடும். வங்கிக் கடன் வாங்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். நிறைய உழைத்து உழைத்து களைத்து போவீர்கள். உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும். குழந்தைகளுடைய போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளின் முன்பு தேவையில்லாத விஷயங்களை பேச வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்க கூடிய நாளாக இருக்கும். கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் இன்று நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அந்த முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் வந்த இடர்பாடுகள் விளக்கும். வீட்டில் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் வரலாம். முயற்சிகளில் தோல்வி அடையலாம். ஆனால் சோர்ந்து போகக்கூடாது. துவண்டு போகக்கூடாது. சுறுசுறுப்பாக உங்களுடைய வேலைகளை எல்லாம் கவனமாக செய்து முடித்து விட வேண்டும். கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டாலும், இன்று உங்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலைகளை சோம்பேறித்தனத்தோடு செய்வீர்கள். நல்ல தூக்கம் இருக்கும். நல்ல சாப்பாடு இருக்கும். ஆனால் வேலை மட்டும் ஒழுங்காக நடக்காது. தொழிலில் பின்னடைவு ஏற்படும். இன்றைக்கான வேலைகள் எல்லாம் அப்படியே தேங்கி நிற்கும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் காலை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலையை தொடங்கனும். பார்த்துக்கோங்க சோம்பேறித்தனத்தை தூக்கி போட்டுருங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரியத்தடை விலகும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் தொடங்கும். சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் மன நிம்மதி கிடைக்கும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் சுமூகமாகத்தான் செல்லும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. மனைவி சொல்பேச்சு கேட்டு நடந்தால் நன்மையை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்கள் உங்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் அமையும். புதிய வேலை கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கொஞ்சம் கையில் இருக்கும் பணம் கரைய தொடங்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வாரா கடன் வசூல் ஆகும். மனது ஆன்மீகத்தை நாடும். இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கு உண்டான வாய்ப்புகள் இருக்கிறது. நிதி நிலைமை, கொஞ்சம் பற்றாக்குறை பட்ஜெட் ஆகத்தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும்.