காதல் உறவை முறித்துக்கொள்ளும் ராசியினர்

காதல் என்பது மிகவும் புனிதமான ஒன்று. ஆனால், எல்லா காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை. அப்படி திருமணம் செய்துகொண்டாலும் அந்த வாழ்க்கை நிலைக்கும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது.

ஒன்று கணவன் உறவை முறித்துக் கொள்ளலாம் அல்லது மனைவி முறித்துக் கொள்ளலாம்.

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஜோதிடத்தின்படி எந்தெந்த ராசியினர் காதலை இடையிலேயே முறித்துக் கொள்வார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்

தமது குறிக்கோள்களை எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேஷ ராசியினரிடம் உள்ள பெரும் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் அதிகமாக கோபப்படுவார்கள்.

இவர்கள் அவர்களது விருப்பங்கள் மற்றும் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதில் அதிகமாக கவனம் செலுத்தி துணையை கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் இவர்களது துணைக்கும் அவர்களுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படும்.

இந்த பிரச்சினை இருவருக்குள்ளும் பூதாகரமாக வெடித்து, இறுதியில் பிரேக்கப்பில் கொண்டு வந்து விடும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் சுதந்திரத்தை சுவாசிப்பதற்காக தங்களது உறவுகளை கைவிடவும் தயங்க மாட்டார்கள்.

அது காதலோ அல்லது திருமணமோ உடனே அதிலிருந்து வெளி வந்துவிடுவார்கள்.

காதலிலோ அல்லது திருமணத்திலோ தங்களது துணையின் மனதை சலிப்படையச் செய்வது மற்றும் சங்கடப்பட வைப்பது இவர்களது அன்றாட வேலையாக இருக்கிறது. இதனால் இவர்கள் உறவில் பிரேக்கப் நிகழ்கிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் மிகவும் மர்மமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்வதை பிறரால் கணிக்க முடியாமல் இருக்கும்.

இவர்களிடம் ஆழமான அன்பு இருந்தாலும் தங்களது துணையைப் பார்த்து பொறாமைப்படக் கூடியவர்கள்.

தங்கள் துணையிடம் சந்தேகம் வரும்படி ஏதாவது நடவடிக்கைகள் தென்பட்டால் அதனை தீர்க்க முயலாமல் உடனே உறவை விட்டு வெளியேற எண்ணுவார்கள். இதற்காக துணையின் இதயம் உடைந்தாலும் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

மீனம்

கற்பனை உலகில் வாழும் இவர்கள், தாம் எவ்வாறு கற்பனை செய்து வைத்திருக்கின்றோமோ அதேபோல் இவர்களது துணை அமைய வேண்டும் என்று எண்ணுவார்கள்.

அவ்வாறு அமையாத பட்சத்தில் வரும் அதிருப்தியினால் அந்த உறவை முறித்துக்கொள்ள விரும்புவார்கள்.

Recommended For You

About the Author: admin