தாக்குதல்களை இடைநிறுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

காசாவில் உதவி விநியோகத்தை எளிதாக்குதவதற்கு தெற்கு காசா பாதையில் தாக்குதல்களை இடைநிறுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

முற்றுகையிடப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் பல மாதங்களாக பஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே மாத ஆரம்பத்தில் இஸ்ரேலியப் படைகள் எகிப்தைக் கைப்பற்றியமை, தீவிரப்படுத்தப்பட்ட தரைவழித் தாக்குதல்கள் காசாவில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையால் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக ஐ.நா அமைப்புகளும் உதவிக் குழுக்களின் சத்தம் மேலோங்கின.

மேலும்,காசாவில் உள்ள 50,000 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி சிகிச்சை தேவை என்று பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் இந்த இடைநிறுத்த அறிவிப்பு தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அறிந்துள்ளார்களா என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பமானதிலிருந்து இதுவரை 307 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னரான காசாவில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் சுமார் 28 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin