ஆட்சி கவிழ்வாரா ரிஷி ? கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடையும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அந்த கட்சி தேர்தல் அழிவை எதிர்கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்பாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் (12-14) Savanta நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு சண்டே டெல்கிராப் நாளிதழில் வெளியானது.

இதில் தொழிற்கட்சியை சேர்ந்த சர் கெய்ர் ஸ்டார்மரருக்கு ஆதரவாக 46 சதவீத மக்கள் ஆதரவு வெளியிட்டுள்ளதுடன் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 21 சதவீதம் பேர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

அத்துடன் ஒப்பீனியம் நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் தொழிற்கட்சி 40% இடங்களைப் பிடிக்கும் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி 23% இடைகளைப் பிடிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டது.இந்த கருத்துக் கணிப்புகள் சண்டே ஒப்சர்வர் நாளிதழில் வெளியிடப்பட்டது.

சர்வேசன் நிறுவனத்தால் கடந்த மே மாதம் 31ஆம் திகதி முதல் இந்த மாதம் 13 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் சண்டே டைம்ஸ் நாளிதழில் வெளியானது.

இவற்றில்மொத்தம் 650 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தொழிற் கட்சி 456 இடங்களைப் பிடிக்கும்(46%) என்றும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 72 இடங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் (24%) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin