காணாமல் போன மீனவர்கள் தமிழக உறவுகளால் மீட்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் – தீவகம் அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் இருவரும் தமிழக மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தமிழகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றிருந்த அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

அவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினரும் அனலைதீவு மீனவர்களும் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

 

கடல் கொந்தளிப்பு காரணமாக படகு திசைமாறிய நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு சென்றதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மீனவர்கள் இருவரும் தொலைத்தொடர்பு கருவிகள் எதனையும் எடுத்துச் சென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin