காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்: சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார்.

கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்ததன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் நீடிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் டெல்லியில் இன்று சனிக்கிழமை (08.06.24) இடம்பெற்றது.

இதன்போது இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போதே சோனியா காந்தி ஏகமனதாக மீண்டும் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பா.ஜ.க. தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக காணப்படுகின்றது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin