மத்திய காசாவில் ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது.
அவர்கள் அல்-நுசிராட்டில் இன்று சனிக்கிழமை (08.06.2024) மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்கப்பட்ட இஸ்ரேலியர்கள் 21,25,27 மற்றும் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உடல் நலம் குறித்து எதுவித பாதிப்பும் இல்லையென இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு நோவா இசை விழாவின் போது குறித்த நால்வரும் சிறைப்பிடிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 93 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆரம்பமானதிலிருந்து இதுலரை 36,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 83,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.