ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர், எனவே தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கலந்துரையாடல் நேற்று (25) இடம்பெற்ற போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
“தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும், ஏன் ஏன்றால் ஒவ்வொரு நாளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர்.
அரசியல் கட்சிகள் பொது மக்களின் வாக்குகளை தமது தேவைக்கு பயன்படுத்துகின்றன. ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மக்களும் விரும்பும் ஒருவரையே வேட்பாளராக நிறுத்துவோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் ஆட்சி மாற்றத்தால் ஏனைய சில அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க முடியாமல் போனது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலங்கை முழுவதும் அந்த அபிவிருத்தி முடக்கப்பட்டதுடன் அந்த ஆட்சி காலத்தில்தான் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
இதற்கான அவப்பெயர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் ஏற்பட்டது. கேட்டாபாய ராஜபக்ச ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
எங்களின் ஆட்சி இடைநடுவில் மாற்றப்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்திருந்தோம்.
எவ்வாறாயினும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.